இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்தது.
இதனையடுத்து தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இரண்டு போட்டியாளர்களான கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகியோரை பிசிசிஐ நேர்காணல் செய்தது.
எனினும், சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல். தொடரில் இருந்தே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.