சீனாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பத்தங்களை அள்ளி குவித்து வருகின்றனர்.
இன்று ஒரே நாளில் மட்டும் 3 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் பதக்கங்களை வென்று அசத்தி உள்ளனர். அதாவது, குதிரையேற்றம், பெண்கள் 25 மீ பிஸ்டல் மற்றும் பெண்களுக்கான 50 மீ ரைபிள் பிரிவில் 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து, படகோட்டத்தில் நேஹா தாக்கூர், பெண்களுக்கான 50 மீ ரைபிள் 3 பொசிஷன்ஸ் அணி, பெண்களுக்கான 25 மீ பிஸ்டலில் ஈஷா சிங் மற்றும் ஆண்களுக்கான ஸ்கீட்டில் அனந்த் ஜீத் சிங் நருகா வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
மேலும், ஆண்களுக்கான படகோட்டத்தில் ஈபத் அலி, ஆஷி சௌக்சி பெண்களுக்கான 50 மீ ரைபிள், ஆண்களுக்கான ஸ்கீட் இந்திய அணி மற்றும் படகோட்டத்தில் விஷ்ணு சரவணன் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். இதன் மூலம், ஆசிய விளையாட்டு போட்டிகளில் 5 தங்கம், 7 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் என இதுவரை 12 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.