சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இன்று (ஏப்ரல் 12) நடைபெறும் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
ஏற்கனவே 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள சென்னை அணி, இன்றைய போட்டியில் தனது சொந்த மைதானத்தில் வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதற்கிடையில், சென்னை Vs ராஜஸ்தான் போட்டியைக் காண்பதற்காக ரசிகர்கள் பலரும் சேப்பாக்கம் மைதானத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.
தவிர, IPL தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக MS தோனி விளையாடும் 200 ஆவது போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியை நினைவுகூரும் விதமாக CSK அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் தோனிக்கு நினைவுப் பரிசு வழங்கியுள்ள நிகழ்ச்சியும் இன்று நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.