உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை செப்டம்பர் 3-ல் பி.சி.சி.ஐ அறிவிக்கிறது.
ஆசிய கோப்பை
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, இன்று (30-ஆம் தேதி) முதல் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை பாகிஸ்தான், இலங்கையில் நடைபெறவுள்ளது. இதில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.
ஆசிய கோப்பைக்கான அணி விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷண், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, சஞ்சு சாம்சன்.
இந்நிலையில் ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படுமென ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் செப்.3-ம் நாள் இந்திய அணி அறிவிக்கப்படுமென தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பையில் இந்திய அணி செப்.2ஆம் நாள் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் சொதப்பி வருகிறார். திலக் வர்மா ஒருநாள் போட்டிகளுக்கு புதுவரவு. அதனால் இந்த ஆசிய கோப்பை போட்டி உலகக் கோப்பை தேர்வுக்கு முக்கிய பங்கு வகிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அக்.5ஆம் நாள் இந்திய மண்ணில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
