கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.5,120 கோடி கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது 2022ல் பெறப்பட்ட ரூ.2,367 கோடியை விட 116 சதவீதம் அதிகம் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ஊடக உரிமைகள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் மூலம் வருவாய் கிடைத்ததாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.