ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் இந்தியா தனது பலத்தை வெளிப்படுத்தி வருகிறது. சீனாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இந்தியா ஏற்கனவே நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. குழுநிலையின் கடைசி ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் நீண்ட கால எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்திய அணியில் கேப்டன் ஹர்மன் ப்ரீத் சிங் இரண்டு கோல்கள் அடித்தார். பாகிஸ்தான் அணி சார்பில் அஹமது நதீம் ஒரு கோல் அடித்தார். இந்த ரவுண்ட் ராபின் போட்டியில் இந்தியா ஏற்கனவே அரையிறுதியை எட்டியுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் அரையிறுதிக்குள் நுழைந்தது.