ஆன்மீகம்

ஆவணி மாத கிருத்திகை விரதத்தின் சிறப்புக்கள்!

27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும். சரவணப் பொய்கையில் தாமரை மலரில் மிதந்து வந்த முருகனை ஆறு கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததன் காரணமாக ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கார்த்திகை நட்சத்திரமாக அவர்கள் வானில் இடம் பெற்றதாக கந்த புராணம் கூறுகிறது. கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் விதமாக கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. மேலும், உலகம் முழுவதும் பல்வேறு தலங்களில் முருகப் பெருமான் கோயில்களில் மாதந்தோறும் கிருத்திகை விழா சிறப்பாக நடைபெறுகிறது.

விரத மகிமை

கிருத்திகை விரதத்தினை தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் பின்பற்றி நாரதர், தேவரிஷி என்ற பட்டம் பெற்றார்.

கிருத்திகை நட்சத்திரத்தில் தானம் செய்பவர்களும் அவரது வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள்.

கிருத்திகை விரதத்தை கடைபிடித்தே திரிசங்கு, பகீரதன், அரிச்சந்திரன் ஆகியோர் பேரரசர்கள் ஆனார்கள்.

கிருத்திகை விரதத்தை தொடர்ந்து ஆயுள் வரை தொடர்ந்து பின்பற்றுவதால் முருகப்பெருமானின் திருவடிகளைப் பெறலாம்.

விரத வழிபாடு

ஆவணி மாத கிருத்திகை தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

காலை முதல் மாலை வரை உணவு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, மாலையில் முருகன் கோயிலுக்கு சென்று முருகனை வழிபட வேண்டும்.

கிருத்திகை விரத தினத்தன்று கந்த சஷ்டி, கந்தபுராணம், சண்முக கவசம், கந்தர் கலிவெண்பா உள்ளிட்ட முருகன் பாடல்களை படிக்கலாம்.

விரதம் இருக்க முடியாதவர்கள் உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கிருத்திகை விரதத்தை கடைபிடிக்கலாம்.

முருகனுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.

வீட்டில் மாலை வேளைகளில் தீபமேற்றி, முருகப்பெருமானின் படத்திற்கு, செண்பகம், செம்பருத்தி, செவ்வரளி, சிவப்பு ரோஜா மலர்ககளில் ஏதாவது சாற்றி, தூபங்கள் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

வீட்டின் அருகில் இருப்பவர்களுக்கு கேசரி, பஞ்சாமிர்தம் போன்றவற்றை பிரசாதமாக வழங்கி சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

ஆவணி மாத சிறப்பு

ஆவணி மாதம் சூரியனுக்கு உகந்த மாதமாக கருதப்படுவதால், சூரிய கிரக தோஷங்கள் நீங்கும்.

சூரியனை போன்ற பிரகாசமான அறிவு மற்றும் ஆற்றலை முருகன் அருளால் எளிதில் பெறலாம்.

பலன்கள்

ஆவணி மாத கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும், பண்பும் நிறைந்த வாழ்க்கைத் துணை கிடைக்கப் பெறுவார்கள்.

எதிரிகளின் தொல்லை, கொடிய நோய்கள் தீரும்.

காரியங்களில் ஏற்படும் தடை, தாமதங்கள் விலகும்.

இதையும் படிங்க:  பழைய நகையை வாங்குவது தோஷமா?

சொத்து வாங்கும் யோகமும், நல்ல லாபமும் ஏற்படும்.

சொந்த வீடு கட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகள், தடைகள் நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: