இந்தியா

கோவாக்சின் தடுப்பூசியை தயாரிக்க மராட்டிய அரசுக்கு சிறப்பு அனுமதி..!

கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை தயாரித்துக் கொள்ள, மராட்டிய அரசின் மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்கியிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரசின் 2 ஆம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதற்கு ஒரே தீர்வு கொரோனா தடுப்பு மருந்து என, மருத்துவ விஞ்ஞானிகள் கூறியதை அடுத்து தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கொரோனாவுக்கான கோவாக்சின் தடுப்பூசியை தயாரிக்க, மராட்டிய அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிதீவிரமடைந்துள்ள நிலையில், மராட்டிய மாநிலத்தில் தான் அதிகளவில் பரவி வருகிறது. ஆனால் கொரோனா பரவலை தடுத்து நிறுத்த, மத்திய அரசு போதிய அளவில் தடுப்பூசிகளை விநியோகிக்கவில்லை என்று மராட்டிய அரசு குற்றம் சாட்டியது. மேலும் தடுப்பூசி போடும் மையங்களையும் மூடி வந்தது.

மத்திய அரசு அனுமதி

இதைத்தொடர்ந்து, மராட்டியத்தில் கோரிக்கையை ஏற்று பாரத் பயோடெக் நிறுவன தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்துக்கொள்ள அம்மாநிலத்தில் உள்ள ஹாப்கைன் மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்கியிருக்கிறது.

உள்நாட்டு தொழில்நுட்ப பரிமாற்றத்தின் அடிப்படையில், பாரத் பயோடெக் கோவாக்சின் கொரோனாயை தயாரிக்க மத்திய அரசும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகமும் மும்பையில் உள்ள ஹாப்கைன் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாக மராட்டிய முதலமைச்சரின் பிரத்யேக டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  இந்தியாவில் இதுவரை 1,38,67,997 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: