இந்தியா

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – கார் & நகைக் கடன்களுக்கான சிறப்பு சலுகை!!

சமீபத்தில் வீட்டுக் கடன்களில் பூஜ்ஜிய செயலாக்கக் கட்டணத்தை அறிவித்த பிறகு, SBI வங்கி தனது வாடிக்கையாளர்களின் தங்கம் மற்றும் கார் கடன்களுக்கான செயலாக்க கட்டணத்தில் முழு தள்ளுபடியை அறிவித்துள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. அதாவது இந்திய சுதந்திர தினத்தின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் விதத்தின் ஒரு பகுதியாக, SBI வங்கி அதன் சில்லறை கடன்கள் மற்றும் வைப்புத்தொகையாக வாடிக்கையாளர்ளுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. முன்னதாக வீட்டுக் கடன்களுக்கான பூஜ்ஜிய செயலாக்க கட்டணத்தை அறிவித்துள்ள SBI வங்கி தனது கார் கடன் வாடிக்கையாளர்களுக்கு செயலாக்க கட்டணத்தில் முழு தள்ளுபடியை தற்போது அறிவித்துள்ளது.

அந்த வகையில் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு SBI வங்கியின் பிளாட்டினம் டெர்ம் டெபாசிட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி வாடிக்கையாளர்கள் 75 நாட்கள், 75 வாரங்கள் மற்றும் 75 மாத காலத்திற்கு இந்த சலுகைகளின் மூலம் கூடுதல் வட்டி சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியும். இந்த சலுகைகள் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 14 வரை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர YONO செயலி மூலம் கார் கடனுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி 25 bps சிறப்பு வட்டி சலுகையையும் வழங்குகிறது.

இந்த சேவைகளை பயன்படுத்தி பயனர்கள் ஆண்டுக்கு 7.5 சதவிகிதத்திற்கும் குறைவான வட்டி விகிதத்தில் கடனைப் பெறலாம். மேலும் தங்கக் கடன் வாடிக்கையாளர்களுக்கு, வட்டி விகிதத்தில் 75 bps குறைப்பை SBI வங்கி வழங்குகிறது. இதனுடன் வாடிக்கையாளர்கள் வங்கியின் அனைத்து கிளைகளிலும் ஆண்டுக்கு 7.5 சதவிகிதம் தங்கக் கடனைப் பெறலாம். யோனோ செயலி மூலம் தங்கக் கடனுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கான செயலாக்கக் கட்டணத்தையும் வங்கி தள்ளுபடி செய்துள்ளது.

SBI வங்கி தனது தனிப்பட்ட மற்றும் ஓய்வூதிய கடன் வாடிக்கையாளர்களுக்கு, அதன் அனைத்து கிளைகளிலும் செயலாக்க கட்டணத்தில் 100 சதவீதத்தை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. மேலும், தனிநபர் கடன்களுக்கு விண்ணப்பிக்கும் போது கொரோனா முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு இவ்வங்கி 50 bps வரை சிறப்பு வட்டி சலுகையை வழங்குகிறது. இந்த வசதி விரைவில் கார் மற்றும் தங்க கடன்களுக்கும் கிடைக்கும் என SBI நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:  பாதுகாப்பு பெட்டகத்திற்கு புதிய விதிமுறைகள் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: