தமிழ்நாடுமாவட்டம்

பொங்கல் பரிசுத்தொகுப்பில் பல்லி.. தட்டி கேட்டவர்மீது வழக்குப்பதிவு செய்ததால் தீக்குளித்த மகன் உயிரிழப்பு!

திருத்தணியில், பொங்கல் பரிசுத்​தொகுப்பில் பல்லி இருந்தது பற்றி தகவல் தெரிவித்த முதியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, தீக்குளித்த முதியவரின் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருத்தணியில் கடந்த 7-ம் தேதி நியாய விலைக்‍கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது. இதில் நந்தன் என்பவருக்‍கு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் இருந்த புளி பாக்‍கெட்டில், இறந்த பல்லி இருந்ததைக்‍ கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து நியாய விலைக்கடை ஊழியர் சரவணனிடம் முதியவர் முறையிட்டபோது, உரிய பதிலளிக்‍காமலும், அலட்சியப்படுத்தும் வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து தவறான தகவல் அளித்ததாக, கடை ஊழியர் சரவணன் கொடுத்த புகாரின்பேரில், நந்தன் மீது காவல்துறையினர் வழக்‍குப்பதிவு செய்தனர். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, நந்தனின் மகன் குப்புசாமி, பெட்ரோல் ஊற்றி தீக்‍குளித்தார். அவரை அக்‍கம்பக்‍கத்தினர் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்‍கு கொண்டு சேர்த்தனர். 80 சதவீத அளவுக்‍கு தீக்காயம் இருப்பதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் குப்புசாமி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்‍கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

முன்னதாக முதியவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் மற்றும் தமிழக அரசைக் கண்டித்து, குப்புசாமியின் உறவினர்கள் திருத்தணி-சித்தூர் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  தமிழ்நாடு முழுவதும் 9.06 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது..!
Back to top button
error: