ஆரோக்கியம்

குறட்டையைக் குறைக்க சில டிப்ஸ்!!

தூங்கும் போது நாசி மற்றும் தொண்டை வழியாக மாறி மாறி சுவாசிப்பதால் குறட்டை ஏற்படுகிறது. சுவாசத்தில் ஏற்படும் இந்த இடையூறு காரணமாக தொண்டையில் உள்ள திசுக்கள் அதிர்ந்து குறட்டை ஒலி எழுப்புகிறது.
குறட்டையால் அருகில் உறங்குவோருக்கு தூக்கம் கெடுகிறது. குறட்டை ஏற்பட உடற்பருமன், வாய்/நாசி/தொண்டை கோளாறு, தூக்கமின்மை ஆகியவை காரணமாக இருக்கலாம். தூங்கும் முன் மது அருந்தினால் கூட குறட்டை ஏற்படலாம்.

சத்தமான குறட்டை, அடிக்கடி குறட்டை, தூங்கும் போது மூச்சுத்திணறல், காலை எழுந்தவுடன் தலைவலி, வறண்ட தொண்டையுடன் விழித்தல், ஞாபக மறதி, பகல் நேரத்தில் தூக்கக் கலக்கம் ஆகியவை இருந்தால் மருத்துவரை அணுகவும்.

குறட்டை தொல்லையில் இருந்து விடுபட உதவும் சில டிப்ஸ், இதோ:-

  1. உடல் எடை குறைக்கவும்: உடற்பருமன் உள்ளவர்கள் குறட்டை விட அதிக வாய்ப்புண்டு. தொண்டை பகுதியில் கொழுப்புத் திசு மற்றும் நலிவான தசை இருந்தால் குறட்டை ஏற்படும். எனவே உடல் எடை குறைப்பது அவசியமாகும்.
  2. மது அருந்தக்கூடாது: தொண்டை தசைகளை லேசாக்கி குறட்டை ஏற்பட காரணமாக அமைவதால் மது அருந்துவதை தவிர்க்கவும்.
  3. பக்கவாட்டில் படுக்கவும்: நேராக படுத்தால் குறட்டை ஏற்பட அதிக வாய்ப்புண்டு. எனவே, பக்கவாட்டில் படுக்கவும்.
  4. பழங்கள்: உணவில் மெலடோனின் அதிகம் எடுத்துக் கொண்டால் ஆழ்ந்த உறக்கம் பெறலாம். எனவே, மெலடோனின் அதிகம் உள்ள வாழைப்பழம், அன்னாசிப் பழம், கமலாப்பழம் ஆகியவை சாப்பிடலாம்.
  5. தலை உயர்த்தி படுக்கவும்: தலையணைகள் கொண்டு தலையை உயர்த்தி வைத்து தூங்கவும். தலையை உயர்த்தி வைத்து தூங்கினால் சீராக சுவாசிக்கலாம்.
  6. புகை பிடிக்காதீர்: சுவாசப்பாதையில் எரிச்சல் உண்டாக்குவதால் புகை பிடிப்பதை தவிர்க்கவும். புகை பிடித்தால் குறட்டை தொல்லை அதிகரிக்கும்.
  7. தேன், இஞ்சி தேனீர்: எச்சில் சுரக்க செய்வதால் இஞ்சி தொண்டைக்கு இதமளிக்கும். தினமும் 2 முறை தேன், இஞ்சி தேநீர் அருந்தினால் குறட்டை தொல்லை குறையும்.
  8. தூக்க மாத்திரை வேண்டாம்: அதிகமாக தூங்கினால் குறைட்டை ஏற்படும். எனவே, தூக்க மாத்திரைகளை தவிர்க்கவும்.
  9. பால் குடிக்கலாம், ஆனால்… பால் மற்றும் பால் பொருட்கள் தொண்டை மற்றும் நாசியில் வீக்கம் ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகும். பால் குடிப்பதை முற்றிலுமாக தவிர்க்க தேவையில்லை. இருப்பினும், தூங்கும் முன் பால் அருந்த வேண்டாம்.
  10. தண்ணீர்: உடலில் நீர் பற்றாக்குறையால் சளி உண்டாகிறது. இதனால் கூட குறட்டை ஏற்படலாம். ஆண்கள் நாளொன்றுக்கு 3.7 லிட்டர், பெண்கள் 2.7 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: