ஆன்மீகம்

சாஸ்திரங்கள் கூறும் செய்யக்கூடாத சில விஷயங்கள்!

சாஸ்திரங்கள் கூறும் செய்யக்கூடாத சில விஷயங்கள் பற்றி இப்பதிவில் காண்போம்.

அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது.

துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷம் ஆகும்.

ஆலயத்தில் இரவு நேரத்தில் குளிக்கக்கூடாது, கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம்.

ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது, உதறக்கூடாது.

பெண்கள் மாதவிடாய் ஆன நான்கு நாள்கள்வரை, கோவிலுக்குப் போக்ககூடாது.

கன்றுக்குட்டி, மாடு ஆகிய இவற்றைக் கட்டியிருக்கும் கயிற்றைத் தாண்டக் கூடாது.

தண்ணீரில் தன் உருவத்தைப் பார்க்கக்கூடாது.

நிலையில் அமரக்கூடாது.

மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது‌.

தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது.

துணி இல்லாமல் குளிக்கக் கூடாது.

சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது.

நெருப்பை வாயினால் ஊதக்கூடாது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: