திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.
தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.
ஆலயங்களில் இறைவனுக்குப் பதினாறு வகை உபசாரங்கள் செய்வார்கள். அவற்றுள் தூப – தீபம் சமர்ப்பித்தலும் ஒன்று. தீப சமர்ப்பணத்தில் 16 வகை தீபங்கள் இடம்பெறும். ஒவ்வொரு தீபத்துக்கும் ஒவ்வொரு தேவர்கள் உரிமையானவர்கள்.
புஷ்ப தீபம்- பிரம்மன்;
புருஷாமிருகம் – கலைமகள்;
நாகதீபம்-நாகராஜர்;
கஜ தீபம் – விநாயகர்;
வியாக்ர தீபம்-பராசக்தி;
ஹம்ச தீபம் – பிரம்மா;
வாஜ்ய தீபம்- சூரியன்;
சிம்ம தீபம்-துர்கை;
சூல தீபம்-மும்மூர்த்திகள்;
துவஜ தீபம்-வாயு;
வ்ருஷப தீபம்-ரிஷபதேவர்;
பிரமா தீபம்-துர்காதேவி;
குக்குட தீபம்-கந்தப்பெருமான்;
கூர்ம தீபம்-மகாவிஷ்ணு;
ஸ்ருக் தீபம்-அக்னி;
சக்தி தீபம்-பராசக்தி.
ஒவ்வொரு தீபத்தை ஏற்றி இறைவனுக்குக் காட்டும்போது, அதற்குரிய தேவர்கள் சூட்சுமமாகத் தோன்றி இறைவனை வழிபடுவதுடன், நமக்கும் அருள்புரிவார்கள். திருக்கோயில்களில் நடைபெறும் இந்த தீப உபசாரத்தைத் தரிசிக்க, 16 பேறுகள் கிடைக்கும் என்பது ஐதீகம்
திரு விளக்கிற்க்கு விபூதி,குங்குமம்,மஞ்சள்,சந்தனம்,என கலந்து உச்சியிலிருந்து ஒரு பொட்டும்,அதன் கீழ் மூன்றும்,அதன் கீழ் இரண்டும்,அதற்கு அடியில் இரண்டுமாக எட்டு இடங்களில் பொட்டு வைக்க வேண்டும்.
உச்சியில் இடும் பொட்டநெற்றியில் இடுவதையும், அடுத்த மூன்று பொட்டுகள், முக்கண்,முத்தீ என்கிற சூரியன்,சந்திரன்,அக்கினி என்பதையும் குறிக்கும்.
அதற்க்கு கீழே உள்ள இரண்டு பொட்டும் இரண்டு கைகளாகவும்,எல்லாவற்றுக்கும் அடியில் வைக்கும் இரண்டு பொட்டு இரு திருவடிகளாகவும் கருதப்படுகிறது. இதனால் விளக்கிற்க்கு எட்டு இடங்களில் பொட்டு இட வேண்டும்.
குத்துவிளக்கில் கிழக்கு பக்கமாக திரி எரியவிட்டால் அது துன்பத்தை விலக்கும். மேலும் குடும்பம் சந்தோஷமாக காணப்படும்.
குத்துவிளக்கை தெற்கு முகமாக எரியவிட கூடாது. அப்படி எரியவிட்டால் பீடை ஏற்படும்.
குத்துவிளக்கை வடக்கு முகமாக எரியவிட்டால், செல்வம்,பொருள் சேரும்.
ஒரே முகத்தை உடைய அகல்விளக்கை காட்டிலும், 5 முக விளக்கே சிறப்பு.
மங்கள நாட்களில் 5 முகங்களிலும் திரி ஏற்றி வழிபடுங்கள். துர் தேவதைகள் விலகும்.
குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துலக்குவது நல்லது. இதற்கு காரணம் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி (குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி) குடியிருக்கிறாள்.
செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம். வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி (குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி) குடியேறுகிறாள். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh