ஆரோக்கியம்

தலைமுடி பிரச்சனைக்கான தீர்வுகள்!!

சோற்றுக் கற்றாழையின் உட்பகுதியில் இருக்கும் வழவழப்பான விழுதுடன் 1 கப் மருதாணி இலையை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதோடு 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து அலசுங்கள்.

நான்கு நாளுக்கு ஒரு முறை இதுபோல் குளித்து வந்தால், கருப்பு, சிவப்பு, பிரவுன் என மூன்று வண்ணங்களில் கூந்தல் மின்னும்.

முடிக்கு மருதாணி சிவப்பு நிறத்தையும், சோற்றுக் காற்றாழை பிரவுன் நிறத்தையும் தரும். ஆலிவ் எண்ணெய் சேர்ப்பதால் முடி சற்றே கருப்பு சாயலில் மின்னும்.

முடி உதிர்வதை தடுக்க

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால் நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

தலைமுடிக்கு இயற்கை நிறம்

மருதாணித்தூள் (ஹென்னா பவுடர்) – 2 டேபிள்ஸ்பூன்

தயிர் – 1 டீஸ்பூன்

வெந்தயத்தூள் – 1 டேபிள்ஸ்பூன்

காபி பவுடர் – 2 டீஸ்பூன்

புதினா சாறு – 2 டீஸ்பூன்

துளசிச்சாறு – 2 டீஸ்பூன்

செய்முறை:

இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஒரு வாணலியில் மூடிவைக்கவும். இரண்டு மணி நேரம் கழித்து, தலையின் உச்சிப் பகுதியில் நன்கு படுமாறு இந்தப் பசையை ஐந்தாறு பகுதிகளாகப் பிரித்துப் போட்டுக்கொள்ளவும். மூன்று அல்லது நான்கு மணி நேரம் தலையில் ஊற வைத்து பிறகு அலசவும்.

இது, தலைமுடிக்கு நரையை நிறம் மாற்றுவதோடு முடியை நன்கு வளரவும் செய்யும். வாரம் ஒரு முறை இதைத் தொடர்ந்து செய்யும்போது, தலைமுடியில் நரை இருக்கும் இடங்களில் நல்ல டார்க் பிரவுன் நிறம் கிடைக்கும். இதில் இயற்கை மூலிகைகள் கலந்திருப்பதால் எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படாது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: