இந்தியா

கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு தோல் பூஞ்சை தொற்று..!

இந்தியாவிலேயே முதல்முறையாக கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்‍கப்பட்ட நபருக்‍கு தோல் பூஞ்சை நோய் தாக்‍கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்‍கு ஆளானவர்களில், நோய் எதிர்ப்பு சக்‍தி மிகக்‍ குறைவாக உள்ளவர்களையும், கட்டுப்படுத்தப்படாத சர்க்‍கரை நோய் உள்ளவர்களையும் கருப்பு பூஞ்சை நோய் தாக்‍கி வருகிறது. வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த 50 வயது நபர் ஒருவருக்‍கு தோல் பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்த அவருக்‍கு காது பகுதியில் பூஞ்சை உருவாகி இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

இதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அவருக்‍கு தோலில் கருப்புப் பூஞ்சை தாக்‍கி இருப்பது கண்டறியப்பட்டது. இந்த தோல் பூஞ்சை நோயை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம் என்றும், இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்‍கு பரவக்‍கூடியது அல்ல என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: