ஆன்மீகம்தமிழ்நாடு

கந்தசஷ்டி விழாவின் ஆறாம் நாள் – மருதமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி

மருதமலையில் முருக பெருமானின் 7-ம் படை வீடான சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் 6வது நாளான இன்று சூரசம்ஹாரம் விழா நடைபெறுகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கோவில் நிர்வாகம் சில கட்டுப்பாட்டு விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.

கந்தசஷ்டி ஆறாம் நாளான இன்று நடைபெறும் நிகழ்ச்சிகள்:

கடந்த நவம்பர் 15-ம் நாள் முதல் காப்பு கட்டி காலை 5 மணிக்கு கோ பூஜையும், 5.30 மணியளவில் கோவில் நடை திறப்பும் நடைபெறுகிறது. பின் 16 வகையான வாசனை பொருட்களை வைத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. காலை 6.30 மணியளவில் மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு சண்முகார்ச்சனையும் நடைபெற்றது. காலை 9 மணியளவில் யாகசாலை பூஜை, 12 மணிக்கு உற்சவர் முருகப்பெருமானுக்கு சண்முகார்ச்சனை, சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

marutha images

பிற்பகல் 2 மணியளவில் இடும்பன் கோவிலில் சூரசம்ஹார சிறப்பு பூஜை நடைபெற்றது. 3 மணியளவில் சுப்ரமணிய சுவாமி பச்சை அம்மன் சன்னதியில் சக்தி வேலை வாங்கும் நிகழ்ச்சி. அதைத்தொடர்ந்து வீர நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுப்ரமணிய சுவாமி வேலை பெற்றுக்கொண்டு சூரசமஹாரத்திற்கு ஆட்டு கிடா வாகனத்திலும், வீரபாகு குதிரை வாகனத்திலும் சென்று நான்கு வதங்களை செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

murutha nadakam

பொதுவாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 1 மணி முதல் 5 மணி வரை விழா நடைபெறும். அப்போது மலைப்பாதைகள் அடைக்கப்பட்டு இருக்கும் என்றும் 5 மணிக்கு மேல் பக்கதர்கள் சென்று வழிபடலாம் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

marutha poojai

அடுத்தடுத்து வாகை சூடுதல், சேவல் கொடி சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். மாலை 4.30 மணியளவில் சூரஸம்ஹாரம் செய்த முருகப்பெருமானின் கோபத்தை தணிப்பதற்காக மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும். இதை தொடர்ந்து, நாளை அதிகாலை 6 மணிக்கு யாகசாலை, 9 மணிக்கு யாகசாலையில் உள்ள கலச தீர்த்தம் வைத்து மூலவருக்கு அபிஷேகம் மற்றும் விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான வள்ளி – தெய்வானை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

loading...
Back to top button
error: Content is protected !!