சினிமாபொழுதுபோக்கு

உனக்கும் எனக்கும் பக பக தான்.! தனுஷுடன் நேருக்கு நேராக மோதவிருக்கும் சிவகார்த்திகேயன்.!

நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் முதன்முதலில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை வளர்த்துக் கொண்டு வெள்ளித்திரையில் தனுஷ் உதவியுடன் கால்தடம் பதித்தார்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பாண்டிராஜ் மெரினா பட வாய்ப்பைக் கொடுத்து இருந்தாலும். நடிகர் தனுஷின் 3 திரை படத்தில் சிவகார்த்திகேயன் நடித்ததன் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை எப்படியாவது ஹீரோவாக மாற்ற வேண்டும் என எண்ணி. தனுஷ் தன்னுடைய சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சிவகார்த்திகேயனை எதிர்நீச்சல் படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தார்.

sivakarthikeyan doctor

அவருக்கு அந்தத் திரைப்படம் வெற்றித் திரைப்படமாக அமைந்ததால் உடனே காக்கிச்சட்டை என்ற படத்தையும் தயாரித்தார். ஆனால் காக்கி சட்டை திரைப்படம் ஓரளவு திரையரங்கில் ஓடியது. ஆனால் காக்கி சட்டை திரைப்படத்தின் பொழுது தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு முட்டி கொண்டதாக பல பத்திரிக்கைகளில் பார்த்திருந்தோம்.

அப்படி இருக்கும் வகையில் சிவகார்த்திகேயன் ஒரு மேடையில் அழ ஆரம்பித்து விட்டார். சிவகார்த்திகேயன் அழுததும் அதற்கு காரணம் தனுஷ் தான் என பலரும் முடிவு செய்து விட்டார்கள் ஆனால் அவர் அந்தப் பிரச்சனைக்கு காரணம் என்ன என்பதை அவர் கடைசிவரை கூறவில்லை.

அப்படி இருக்கும் வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம். தனுஷின் கர்ணன் திரைப்படத்துடன் மோத இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி வெளியாக இருக்கும் அந்த நேரத்தில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படமும் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது இதற்குமுன் ஏற்கனவே பலமுறை நேருக்குநேர் மோதுவதற்கு வாய்ப்பு கிடைத்தாலும் சில காரணங்களால் ஒதுங்கி விட்டார்கள்.

ஆனால் இந்த முறை பல நாள் பகையை மனதில் வைத்துக்கொண்டு நேருக்கு நேராக களமிறங்க இருக்கிறாராம் சிவகார்த்திகேயன். இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் இருந்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது ஆனால் கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படலாம் எனவும் கூறுகிறார்கள்.

Back to top button
error: Content is protected !!