ஆரோக்கியம்

மஞ்சள் பற்களை விரைவில் வெண்மையாக மாற்ற எளிய வழிமுறைகள்!!

நமது முக வசீகரத்தில் சிரிப்பிற்கு மிக பெரிய பங்கு இருக்கிறது. ஆரோக்கியமான மற்றும் பிரகாசமான புன்னகை மகிழ்ச்சியை கொடுக்கும். பற்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் உணவு பழக்கம் உங்கள் பற்களுக்கு நீண்ட ஆயுளையும் கொடுக்கும். வெண்மையான பற்களை கொண்டு அழகாக சிரிக்க, உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே உங்கள் பற்களை வெண்மையாக்கலாம்.தோலில் சுருக்கங்கள் போல, பற்களில் மஞ்சள் நிறம் தோன்றும். இவைகளை நீக்க சில எளிய வழிமுறைகள்…

தினமும் கற்றாழை ஜெல் கொண்டு பற்களை தேய்த்திடுங்கள். இதனால் பற்களில் உள்ள கறை மறைவதுடன் வாய் துர்நாற்றமும் வராது.

ஸ்ட்ராபெர்ரியை நன்றாக மசித்து வைத்து கொள்ளவும். இந்த பேஸ்டை கொண்டு வாரத்திற்கு 2 முறை பற்களை தேய்த்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். வாயில் ஸ்டராபெர்ரியை போட்டு நன்றாக மெல்லவும். இதுவும் நல்ல பலனை கொடுக்கும். ஸ்டராபெர்ரியில் உள்ள மாலிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி பற்களை வெண்மையாக்கும். பற்களின் மேலே படர்ந்திருக்கிற கரையை இது போக்குகிறது.

ஒரு டீ ஸ்பூன் கிராம்பு பொடியுடன் ஒரு டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து, கறைபடிந்த பற்களில் தேய்த்திடுங்கள். சிறிது நேரத்திற்குப் பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளித்து விடுங்கள். இரவு படுப்பதற்கு முன்பாக இதனைச் செய்ய வேண்டும்.

ஒரு கிண்ணத்தில் சிறு துளி பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சை சாறை சேர்த்து நுரை வரும்வரை கலக்கவும். வாயில் உள்ள உமிழ் நீரை துப்பி விட்டு, ஒரு பஞ்சை இந்த கலவையில் நனைத்து பற்களில் தேய்க்கவும்.

ஒரு நிமிடம் கழித்து டூத் பிரஷ் கொண்டு மென்மையாக தேய்க்கவும்.பிறகு நன்றாக கழுவவும். 1 நிமிடத்திற்கு மேல் இந்த கலவையை வாயில் வைத்திருக்க வேண்டாம். இது பற்களின் எனாமலை அரித்து விடும்.வாரத்திற்கு ஒரு முறை இதனை பயன்படுத்துவது நல்லது. இதனை பயன்படுத்திய பின் பற்களில் எரிச்சல் தோன்றினால், பேக்கிங் சோடா சிராய்ப்பு தன்மை கொண்டுள்ளதாக அர்த்தம். ஆகவே இந்த முயற்சியை கைவிடுவது நல்லது.

பேக்கிங் சோடாவில் உள்ள வேதிப்பொருள் எலுமிச்சையுடன் சேர்ந்து கலக்கும்போது பற்களுக்கு நல்ல பிரகாசத்தை கொடுக்கும். இதனை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது.

கொய்யாப் பழம் மற்றும் கொய்யா இலைகள் இரண்டுமே பற்களின் கறையை போக்கிடும். தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிடலாம். அதே போல கொய்யா இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து அதனைக் கொண்டு வாயை கொப்பளித்து வாருங்கள்.

ஆப்பிள் , கேரட், கொத்துமல்லி போன்றவை பற்களுக்கு நல்லது. இவை ஒரு இயற்கையான் டூத் பிரஷ் போல் செயலாற்றும். இவைகளை வாயில் போட்டு மெல்லுவதால், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்படும். பற்களின்மேல் உள்ள கறைகளை விரட்டும். இவற்றில் உள்ள அமிலங்கள் பற்களையும் வெண்மையாக்க உதவும். ஆப்பிளில் உள்ள மாலிக் அமிலம் கறைகளை போக்க கூடியது.

ஆரஞ்சு பழத்தோலைக் கொண்டு பற்களை நன்றாக தேய்த்துவிடுங்கள். இதனை தேய்த்தப்பிறகு வேறு எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது. பின்னர் மறு நாள் காலை எழுந்து வாயை கொப்பளிக்கலாம். இரவு முழுவதும் பற்களில் படர்ந்திருப்பதால் ஆரஞ்சு பழத்தோல் கறையை போக்குவதுடன் கிருமிகளையும் அழித்திடும்.

ஒரு ஸ்பூன் சுத்தமான ஆர்கானிக் எண்ணெய்யை எடுத்து வாயில் ஊற்றி கொப்பளிக்க வேண்டும். 15-20 நிமிடங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.வாய் முழுதும் எண்ணெய்யை சுழற்றி, உறிஞ்சி பற்களில் படும்படி நன்றாக கொப்பளிக்க வேண்டும். பிறகு எண்ணெய்யை துப்பிவிட்டு நீரால் வாயை கழுவவேண்டும். பின்பு 2-3 கிளாஸ் தண்ணீர் பருக வேண்டும்.இது நமது பாரம்பரிய முறை. உடலையம் பற்களையும் சுத்தமாக்குவதற்கு உதவும். மிகவும் எளிய முறை, தீங்கு இல்லாதது.

காபி, டீ, கூல்டிரிங்ஸ், சோடா போன்றவை பற்களை சேதமடைய செய்யும். ஆகவே இவற்றை பருகும்போது பற்களில் படாதவாறு ஸ்ட்ரா பயன்படுத்தலாம். ஸ்ட்ரா பயன்படுத்துவது சிரமமாக இருந்தால் அவற்றை பருகியபின் வாயை சுத்தமாக கழுவலாம் அல்லது அதிகமாக பற்களில் படாதவாறு குடிக்கலாம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: