ஆரோக்கியம்

மூட்டுவலி பாதிப்பை தவிர்க்க எளிய உடற்பயிற்சிகள்!

முன்பெல்லாம் முதுமையில் வந்த மூட்டு வலி இன்றைய உணவு முறை மாற்றத்தால் இளைஞர்களுக்கும் கூட வந்து விடுகிறது. உடல் பருமன், ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்தல் உள்ளிட்ட காரணங்களால் பலருக்கும் ஏற்படும் இந்த மூட்டு வலியை எப்படிச் சமாளிக்கலாம்?!..இதற்கு ஒரே தீர்வு இயன்றவரையில் மூட்டுகளை ஓரளவு வலிமையாக்கும் உடற் பயிற்சிகளை தேர்வு செய்து செய்வதே! அதில் ஒரு முக்கிய உடற்பயிற்சியை தான் இந்தக் கட்டுரையின் வாயிலாக நாம் காண இருக்கிறோம்.

நாற்காலி உடற்பயிற்சி

1. முழங்கால் மூட்டுகளில் உள்ள வலியை குறைக்க, நாற்காலியின் நுனியில், நிமிர்ந்து அமர வேண்டும். இடது காலை முன்புறமாக நீட்டிய படி சில விநாடிகள் வைத்திருக்க வேண்டும். பின் பழைய நிலைக்குத் திரும்பவும். இதேபோல், வலது காலுக்கும் செய்ய வேண்டும். இது ஒரு செட். இது போல், 15 முறை செய்ய வேண்டும்.

பின்னர், நாற்காலியில் நிமிர்ந்து அமர்ந்து துண்டு அல்லது இறுக்கமான தலையணையை முழங்கால்களின் அடியில் வைக்க வேண்டும். இடது காலை முன்புறமாக நீட்டியபடி சில விநாடிகள் கழித்து பழைய நிலைக்குத் திரும்பவும். இதே போல வலது காலுக்கும் செய்ய வேண்டும். இது ஒரு செட். இது போல், 15 முறை செய்ய வேண்டும்.

தீர்வு

இந்தப் பயிற்சியை தினமும் பொறுமையுடன் நிதானமாகச் செய்து வந்தால்,

காலின் பின் தசைகள் வலுவாகும்.

முதுகுத்தண்டு நேராகும்.

குறிப்பாக, அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் தொடை மற்றும் முழங்கால் வலி நீங்கும்.

கணுக்கால் வலியும் நீங்கும்.

இதேபோன்று, சற்று வித்தியாசமான பயிற்சி கை மூட்டுகளுக்கும் உண்டு. அதைப்பற்றி காண்போம்.

கை உடற்பயிற்சி

நேராக நின்று, முழங்கையை இடுப்புக்கு மேல் எல் (L) வடிவில் வைக்க வேண்டும். உள்ளங்கைகளை விரித்து நீட்டி, இறுக்கமாக வைத்துக்கொள்ளவும். பின், மணிக்கட்டை அசைக்காமல், உள்ளங்கையை மெதுவாக தரையைப் பார்த்தபடி திருப்ப வேண்டும். மீண்டும் வெளிப்புறமாகத் திருப்பி, பழைய நிலைக்கு வர வேண்டும். இப்படிச் செய்யும் இன்-அவுட், ஒரு செட். இதேபோல், 15 முறை செய்ய வேண்டும்.

பின்னர் மீண்டும், தரையில் நேராக நின்று, முழங்கையை இடுப்புக்கு மேல் L வடிவில் வைக்க வேண்டும். கைகளில் உங்களால் தாங்க முடிந்த அளவில் டம்பிள்ஸைப் பிடித்துக் கொள்ளவும். பின், உள்ளங்கையை மெதுவாக உட்புறமாகத் (கீழ்நோக்கி) திருப்ப வேண்டும். மணிக்கட்டை மட்டும் அசைக்கக் கூடாது, முழுக் கையையும் சேர்த்துத் திருப்ப வேண்டும். மீண்டும் வெளிப்புறமாகத் திருப்பி, பழைய நிலைக்கு வர வேண்டும். இப்படி செய்யும் இன்-அவுட் ஒரு செட். இதேபோல், 15 முறை செய்ய வேண்டும்.

இதையும் படிங்க:  உடலின் கெட்ட கொழுப்பை குறைக்கும் வால்நட்ஸ்!

தீர்வு

இப்படியாகத் தொடர்ந்து பொறுமையாக இப்பயிற்சியை செய்ய,

கைகளில் உள்ள சதைப்பகுதி உறுதியாகும்.

கை எலும்புகள் மற்றும் முழங்கை பலமாகும்.

குறிப்பாக, மணிக்கட்டில் ஏற்படும் வலி குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: