சினிமாபொழுதுபோக்கு

மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு..!

மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. அந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இருவரும் இணைந்து பணிபுரிந்தார்கள்.

இந்நிலையில், தற்போது ‘மாநாடு’, ‘பத்துதல’ படங்களில் நடித்துவரும் சிம்பு மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.அந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது குறித்த அதிகாரவப்பூர்வ அறிவிப்பை வேல்ஸ் நிறுவனம் தனது இணையபக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மேலும் இது சிம்புவின் 47 வது படமாக உருவாகவுள்ளது.

Back to top button
error: Content is protected !!