மாவட்டம்

கொட்டும் மழையில் பள்ளத்தை மூடிய குழந்தைகள் – சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் பாராட்டு

கோயம்புத்தூரில் பெய்த கன மழையின் போது, சாலையோரமாக இருந்த கழிவுநீர் பள்ளத்தை இரு குழந்தைகள் இணைந்து கட்டைகள் போட்டு மூடிய காட்சி சமூக வலைதளத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வந்தது.

இந்த வீடியோவினை ட்விட்டரில் பகிர்ந்த ஐபிஎஸ் அலுவலர் சைலேந்திர பாபு, பொறுப்புணர்வுடன் செயல்பட்ட இரு குழந்தைகளுக்கும் தலைவணங்குவதாக, தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், சைலேந்திர பாபு இரு குழந்தைகளையும், அவர்களது பெற்றோரையும் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், “ஆபத்தான கழிவுநீர் பள்ளத்தை மூடிய குழந்தைகள் தேவயானி, சகோதரர் விக்னேஷுக்கு தீயணைப்புத்துறை சார்பாக பாராட்டுகள். அவர்களாகவே இதைச் செய்திருக்கிறார்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Back to top button
error: Content is protected !!