இந்தியா

76 குழந்தைகளை கண்டுபிடித்து எஸ்ஐயான பெண் ஏட்டு..

டெல்லி காவல்துறையில் சீமா டாக்கா என்ற தலைமை காவலர் பணியாற்றி வருகிறார். கடந்த 2006ஆம் ஆண்டு காவல்துறை காவலராக பணியில் சேர்ந்த அவர் தற்போது தலைமை காவலராக உள்ளார். சின்சியாரிட்டிக்கு பேர் போன சீமா டாக்கா கடந்த 3 மாதங்களில் டெல்லியில் காணாமல் போன 76 குழந்தைகளை கண்டு பிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

இதில் 56 குழந்தைகள் 14 வயதுக்கும் குறைவானவர்கள். மேலும் அனைவரும் கடந்த 12 மாதத்திற்குள் காணாமல் போனவர்கள். இவரின் சிறப்பான செயல்பாட்டை பாராட்டி டெல்லி காவல்துறை எஸ்ஐ பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து சீமா டாக்கா கூறுகையில்…..இந்த குழந்தைகளை மீட்பதற்கு டெல்லி மட்டும் இன்றி மேற்கு வங்காளம், பஞ்சாப், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அலைந்து திரிந்து உள்ளோம். பல்வேறு கடின சூழல்களை கடந்து கண்டு பிடித்து உள்ளோம். இப்பணி செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் கூறி உள்ளார்.

loading...
Back to top button
error: Content is protected !!