இறால் ஃப்ரை, தொக்கு, வறுவல் என பல வகையான ரெசிப்பிகளை செய்து சாப்பிட்டு இருப்போம். தற்போது இறால் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – 2 கப்
இறால் – 250 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 3
லவங்கம் – 3
அன்னாசிப்பூ – 1
அன்னாசி மொக்கு – 2
ஏலக்காய் – 3
பட்டை – 4
பிரியாணி இலை – 2
பிரியாணி மசாலா – 3 ஸ்பூன்
இஞ்சி- பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
தயிர் – 1 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
புதினா – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
இறாலை கழுவி உப்பு, தயிர், மிளகாய்த் தூள் சேர்த்து கலந்து ஊற வைத்துக் கொள்ளவும். அடுத்து வெங்காயம், தக்காளி, புதினாவை நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ, லவங்கம், அன்னாசி மொக்கு, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டினை வதக்கிக் கொள்ளவும். அடுத்து பிரியாணி மசாலா, மிளகாய்த் தூள், இறால், அரிசி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் அரிசியைவிட இரண்டு மடங்கு தண்ணீர்விட்டு வேகவிட்டு இறக்கினால் இறால் பிரியாணி ரெடி.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh