தமிழ்நாடுமாவட்டம்

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு..!

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், 2-ம் முறையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வருவோர், தட்டுப்பாடு காரணமாக திருப்பி அனுப்பப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், நாள்தோறும் 150க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, கொரோனா பரவலை தடுக்க அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தன. முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் 28 நாட்கள் இடைவெளியில் 2-வது டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும்.

இந்நிலையில், 2-வது டோஸ் போடச் சென்ற அரசு ஊழியர்கள், ஒரு மாதம் கழித்து வருமாறு கூறி திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட பத்தாயிரம் டோஸ் தடுப்பூசி மீண்டும் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாகவும், இதனால் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: