தமிழ்நாடு

செப்.8 வரை 11 நாட்களுக்கு கடைகள் செயல்பட அனுமதி இல்லை – சென்னை காவல்துறை அறிவிப்பு!!

சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் வருடாந்திர திருவிழா ஆகஸ்ட் 28 முதல் தொடங்கி உள்ள நிலையில் புதிய கட்டுப்பாடுகளை பெருநகர காவல்துறை அறிவித்து உள்ளது. இதனை செப்.8ம் தேதி வரை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மத வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் வழக்கமாக நடைபெறும் திருவிழாக்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆகஸ்ட் 28ம் தேதி முதல் தொடங்கி உள்ள சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல திருவிழாவின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை காவல்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி,

  • அன்னை வேளாங்கண்ணி திருத்தலம்‌, பெசன்ட்‌ நகர்‌, சென்னை பெருநகர மாநகராட்சி 13வது மண்டலம்‌, 181வது வட்டம்‌, 16 திருவான்மியூர்‌ காவல்‌ நிலைய சரகம்‌, அடையாறு காவல்‌ மாவட்டத்தில்‌ அமைந்துள்ளது. ஆண்டுதோறும்‌ வருடாந்திர திருவிழா ஆகஸ்ட்‌ மற்றும்‌ செப்டம்பர்‌ மாதங்களில்‌ நடைபெறும்‌. 49வது வருடாந்திர திருவிழா இந்த ஆண்டு 29.08.2021 அன்று நடைபெற உள்ளது.
  • பொதுமக்களின்‌ பாதுகாப்பிற்கும்‌, பொது நலன்‌ கருதியும்‌ கோவிட்‌ – 19 பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டு பொதுமக்களுக்கும்‌, பக்தர்களுக்கும்‌ அனுமதி இல்லை.  ஆகையால் ‌பொதுமக்களும்‌, பக்தர்களும்‌, பெசன்ட்‌ நகர்‌ அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்துற்கு வருகிற 29.08.2021 (கொடியேற்றம்‌) மற்றும்‌ 07.09.2021 (தேரோட்டம்‌) போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவதை தவிர்க்க கோரப்படுகிறது. பொது மக்களும்‌, பக்தர்களும்‌ மேற்படி இரண்டு நிகழ்வுகளையும்‌ தொலைக்காட்‌சி மற்றும்‌ நேரடி சமூக வலைதளங்கள்‌ மூலம்‌ காணலாம்‌.
  • எனவே, பொதுமக்கள்‌ கூட்டங்களை தவிர்க்க, பெசன்ட்‌ நகர்‌ கடற்கரை பகுதிக்கு வாகனத்துடன்‌ வர வேண்டாம்‌ என கோரப்படுகிறது.
  • பொதுமக்கள்‌ வருகிற 29.08.2021 மற்றும்‌ 07.09.2021 ஆகிய இரு தினங்களிலும்‌ பெசன்ட்‌ நகர்‌ கடற்கரை பகுதிக்கு வாகனத்துடன்‌ வர வேண்டாம்‌ எனவும்‌ காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கவும்‌ கோரப்படுகிறது.
  • அன்னை வேளாங்கண்ணி திருத்தலம்‌, பெசன்ட்‌ நகரை சுற்றியுள்ள வர்த்தக வளாகங்கள்‌, கடைகள்‌ செயல்பட 28.08.2021 முதல்‌ 08.09.2021 வரை அனுமதி மறுக்கப்படுகிறது.
  • இந்த திருவிழா நாட்களில்‌ பொதுமக்களும்‌, பக்தர்களும்‌ பெசன்ட்‌ நகர்‌ மற்றும்‌ திருவான்மியூர்‌ கடற்கரை பகுதிகளுக்கு வர அனுமது மறுக்கப்படுகிறது.
  • பொதுமக்களும்‌, பக்தர்களும்‌ சென்னை பெருநகர காவல்‌ துறை மற்றும்‌ சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியோர்களது மேற்படி வழிகாட்டுதல்களை பின்பற்றி, இந்த கோவிட்‌ – 19 பெருந்தொற்றிலிருந்து விடுபட ஒத்துழைப்பு நல்குமாறு கோரப்படுகிறது.
  கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் விளக்கம்!!

உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: