தமிழ்நாடு

இரவு 10 மணிவரை கடைகள் திறப்பு – இன்று முதல் கூடுதல் ஊரடங்கு தளர்வுகள் அமல்!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் இன்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்கள் அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், கடந்த மே 10 ஆம் தேதி முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக கொரோனா பரவல் குறைந்தது. அதன் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது.

புதிய ஊரடங்கு தளர்வுகள் இன்று காலை முதல் அமலுக்கு வர உள்ளது. மேலும் ஊரடங்கு செப்டம்பர் 6-ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பல்வேறு புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவற்றில் ஒரு சில தளர்வுகள் இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளன.

இன்று முதல் அமல்படுத்தப்படும் தளர்வுகள்:

  • கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் இன்று முதல் 50 சதவிகித பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்கு பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அதை திரையரங்கு உரிமையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
  • மேலும் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரவு 10 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
  • தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • அனைத்து கடற்கரை பகுதிகளிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், இப்பகுதிகளில் பணியாளர்கள் மற்றும் சிறுவியாபாரிகள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த மாநகராட்சி/மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • உயிரியியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • பயிற்சியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பயிற்சி பெறுபவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: