இந்தியா

இந்தியாவில் 10 வயதிலேயே புகையிலையை கையில் எடுக்கும் சிறுவர்கள் – சர்வேயில் அதிர்ச்சி தகவல்!!!

புகையிலைப் பயன்பாடு குறித்து ஐ.ஐ.பி.எஸ்., மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் 4 வது உலகளாவிய இளைஞர் புகையிலை சர்வே நடத்தப்பட்டது. இதில் 10 வயது சிறுவர்கள் அதிகம் புகையிலை பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச இளைஞர்களுக்கான புகையிலை குறித்த ஆய்வறிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார். அந்த அறிக்கையின் படி 10 வயது சிறுவர்கள் அதிகம் புகையிலை பயன்படுத்துவதாக கூறப்பட்டு உள்ளது.

மேலும் இந்தியாவை பொறுத்தவரையில் பள்ளி மாணவர்களிடையே புகையிலை பழக்கம் அதிகமாக காணப்படுகிறது. ஐந்தில் ஒரு மாணவன் புகையிலை பயன்படுத்துவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் அதிகம் புகையிலையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அதே போல் இமாச்சலப் பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் மாணவர்களிடையே புகையிலை பயன்படுத்துவது குறைவாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

10 வயதுக்கு குறைவான 38 சதவீதம் சிறுவர்கள் சிகரெட் பிடிப்பது, 47 சதவீதம் பேர் பீடி பிடிப்பது, 52 சதவீதம் பேர் புகையிலையை வேறு வடிவத்தில் பயன்படுத்துவதாகவும் ஆய்வில் கூறப்படுகிறது. சிகரெட் பிடிப்பவர்கள் சராசரி வயது 11.5 ஆகவும், பீடி பிடிப்பவர்கள் சராசரி வயது 10.5 ஆகவும், புகையிலையை வேறு வடிவத்தில் பயன்படுத்துவது 9.9 வயதிலும் தொடங்குகிறது என நடத்தி முடிக்கப்பட்ட சர்வே முடிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க:  ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை பள்ளிகளை மூட உத்தரவு – மாநில அரசு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: