உலகம்

ஊரடங்கில் ஆபாச படங்கள் பார்த்த இளைஞர்கள்! வெளியான திடுக்கிடும் டேட்டா..!

இங்கிலாந்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் போடப்பட்டிருந்தது.

இந்த நேரத்தில் வீட்டில் முடங்கி இருந்த இளைஞர்கள் ஆன்லைனில் பெரும்பாலான நேரத்தை செலவிட்டனர். இதுகுறித்த டேட்டா ஒன்றை வெளியிட்டுள்ளது மீடியா ரெகுலேட்டர் அப்காம்.

இங்கிலாந்தில் இருக்கும் இளைஞர்களில் சரிபாதி பேர் ஆபாச வெப்சைட்டுகள் மற்றும் செயலிகளை உபயோகித்து உள்ளதாகக் கூறி உள்ளது.

இதுகுறித்து கூறுகையில், “ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் வீடியோ தளங்களை நெறிமுறைப்படுத்தும் விதமாக ஆன்லைன் அடுல்ட் கண்டெண்ட் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு இன்டர்நெட் பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

ஆன்லைன் கல்வி மற்றும் வீட்டில் இருந்து வேலை, பொழுதுபோக்கு என சகலத்துக்கும் ஆன்லைன் தேவைப்பட்டது. சராசரியாக ஒருவர் நாள் ஒன்றுக்கு ஆன்லைன் பயன்படுத்தும் விகிதம் 3 மணி நேரம் 30 நிமிடங்களாக 2019ல் இருந்தது.

அந்த விகிதம் ஜெர்மனி மற்றும் பிரான்ஸில் தற்போது மேலும் 9 நிமிடங்கள் அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் சராசரியாக நாளொன்றுக்கு ஒருவர் 4 மணி நேரம் 7 நிமிடங்கள் ஆன்லைனில் செலவிடுகிறார்.

சோஷியல் மீடியா, வீடியோ தளங்களுக்கு இங்கிலாந்தில் இணையம் பயன்படுத்தும் 97 விழுக்காடு இளைஞர்கள் பார்வையிடுவதாகவும் மூன்று முதல் நான்கு வயது இருக்கும் குழந்தைகளில் 93 விழுக்காடு பேர் வீடியோ தளங்களை பயன்படுத்துகின்றனர்.

18 முதல் 24 வயதுடைய பதின்ம வயதினர் அதிகமாக வீடியோ தளங்களை உபயோகிக்கின்றனர். 2019ம் ஆண்டு செப்டம்பரில் சராசரியாக ஒரு மணிநேரம் 16 நிமிடங்கள் யூடியூப் தளத்தில் செலவிட்டவர்கள் தற்போது 11 நிமிடங்கள் அதிகரித்து ஒரு மணி நேரம் 27 நிமிடங்களில் செலவிடுகின்றனர்.

டிக் டாக் செயலி-ன் வருகைக்குப் பின்னர் அதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2021 மார்ச் மாதம் 14 மில்லியனாக உயர்ந்துள்ளது. டிக் டாக் செயலியை இளைஞர்களே அதிகமாக உபயோகப்படுத்துகின்றனர்.

செப்டம்பர் 2020 மட்டும் இங்கிலாந்தை சேர்ந்த 26 மில்லியன் பேர் ஆபாச வெப்சைட்டுகள் மற்றும் செயலிகளை பார்த்துள்ளனர்.

அதில் நான்கில் மூன்று பகுதியினர் பருவ வயது இளைஞர்கள் என தெரிய வந்துள்ளது. இந்த புள்ளி விபரத்தின் அடிப்படையில் கணக்கிடும்போது இங்கிலாந்தில் இருக்கும் இளைஞர்களில் சரிபாதி பேர் அந்த படங்களை பார்த்து உள்ளனர்.

இளைஞர்கள் மட்டுமே அந்த படங்கள் இருக்கும் தளங்களையும் செயலிகளையும் உபயோகப்படுத்தவில்லை. பெண்களும் ஆபாச வெப்சைட்டுகளை பார்த்துள்ளனர். எங்களின் தரவுகளின்படி 16 விழுக்காடு பெண்கள் ஆபாச வெப்சைட் மற்றும் செயலிகளுக்கு சென்றுள்ளனர்” என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: