சினிமாபொழுதுபோக்கு

3 வது குழந்தைக்கு தந்தையாகும் செல்வராகவன் – குவியும் வாழ்த்து மழை..!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவரது மனைவி கீதாஞ்சலி இவரும் ஓர் இயக்குனர் ஆவர். தற்போது இந்த ஜோடிக்கு 3 வது குழந்தையாக ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது இந்த ஜோடிக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

செல்வராகவன்:

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு திரைப்படத்தை இயக்குபவர் செல்வராகவன். இவர் இயக்கிய அனைத்து படங்களின் கதைகளும் ரசிகர்களால் கவரப்பட்டது. மேலும் இவர் இயக்கத்தில் வெளிவந்த புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் திரைபடம் இன்று வரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. இவர் கடந்த 2011ம் ஆண்டில் இயக்குனர் கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2012ம் ஆண்டில் லீலாவது என்னும் பெண் குழந்தையும் 2013ல் ஓம்கார் என்னும் ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இவரது மனைவி மாலை நேரத்து மயக்கம் என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

selvaraghavan gitanjali23 insta1

தற்போது இந்த ஜோடிக்கு இன்று 3 வது குழந்தையாக அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை கீதாஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் தெரிவித்தார். மேலும் அவர்களது 3 வது குழந்தைக்கு ரிஷிகேஷ் என்று பெயரிட்டுள்ளதாக அவர் தெவித்தார். தற்போது இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தங்களது ரசிகர்கள் வாழ்த்துக்களுக்கு கீதாஞ்சலி நன்றி கூறி வருகிறார்.

Back to top button
error: Content is protected !!