மாவட்டம்

வாணியம்பாடி அருகே 2 லாரிகளில் கடத்தி வரப்பட்ட 40 டன் அரிசி பறிமுதல்..!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் நேற்று இரவு உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர் செல்வக்குமார் தலைமையிலான அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த கர்நாடகா மற்றும் ஆந்திர பதிவெண் கொண்ட 2 லாரியையும் துரத்தி சென்று வாணியம்பாடி சுங்கசாவடி அருகே மடக்கிப் சோதனை மேற்கொண்டதில் 2 லாரிகளிலும் ஆவணங்களின்றி சுமார் 40 டன் எடையுள்ள ரேசன் அரிசியை வெளி மாநிலங்களுக்கு கடத்தி செல்லபடுவது தெரியவந்தது.

இதனையடுத்து, இரு லாரிகளையும் ஆம்பூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:  பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: