இந்தியா

1 முதல் 5ம் வகுப்புகளுக்கு இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு – உத்தரகண்ட் மாநில அரசு அனுமதி!!

உத்தரகண்ட் மாநிலம் முழுவதும் தற்போது கொரோனா 2 ம் அலை தொற்று குறைந்துள்ளதை அடுத்து இன்று (செப்டம்பர் 21) முதல் 1 லிருந்து 5 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளன.

உத்தரகண்ட் மாநிலத்தில் பள்ளிகளை திறக்கும் நடவடிக்கையின் இறுதி கட்டமாக 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் முறையான கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் இன்று (செப்டம்பர் 21) முதல் துவங்கியுள்ளது. முன்னதாக அம்மாநிலத்தில் கொரோனா தொற்று சூழ்நிலையை ஆய்வு செய்த உத்தரகண்ட் அரசு, இன்று முதல் 1-5 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட பள்ளிக்கல்வித் துறையின் அறிவுறுத்தலின் படி, நேரடி வகுப்புகள் ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் மட்டுமே நடைபெறும் எனவும், மாணவர்கள் பள்ளிக்கு உணவு கொண்டு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்டில் கடந்த மாதம் முதல் 9 லிருந்து 12 வரையுள்ள வகுப்புகளுக்கும், பின்னர் 6 லிருந்து 8 வரையுள்ள வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இப்போது மூன்றாம் கட்டமாக 1 முதல் 5 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சானிடைசர் உபயோகம், வெப்பநிலை பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என பள்ளி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே குழந்தைகள் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள, பெற்றோரிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும் வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் ஆன்லைன் வகுப்புகளும் தொடர்ந்து நடத்தப்படும். மேலும் பள்ளி மாணவர்களுக்கு இருமல், சளி அல்லது காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வீடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும், பள்ளி வளாகங்களில் சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  புதிய நாடாளுமன்றம் கட்டும் பணிகள் 35% நிறைவு.. ரூ.340.58 கோடி செலவு..!
Back to top button
error: