இந்தியா

குஜராத் மாநிலத்தில் செப்.2ம் தேதி 6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

குஜராத் மாநிலத்தில் வரும் செப்டம்பர் 2ம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று குஜராத் கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சுடசாமா அறிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்பு அதிக அளவில் இருந்ததால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் அனைத்தும் தீவிர முறையில் கண்காணிக்கப்பட்டது. இதனால் முன்னதாக கொரோனா பாதிப்பு மாநிலம் முழுவதும் மெல்ல குறைந்து வந்தது. எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது.

அதன் பின்னர், ஜூலை 26ம் தேதி முதல் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களுடனும் 50% மாணவர்களுடன் பள்ளிகளை அரசு திறந்து செயல்பட்டு வருகிறது. நேரடி வகுப்புகளில் கனைத்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தங்கள் பெற்றோரின் அனுமதி கடிதத்துடன் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் மீண்டும் வகுப்புகளை தொடங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் குஜராத் கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சுடசாமா செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் 6 முதல் 8 வகுப்புகளுக்கான நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். பள்ளிகள் மீண்டும் திறக்க மாநில மற்றும் மத்திய அரசால் வழங்கப்பட்ட அனைத்து நிலையான பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். வகுப்புகள் மற்றும் பள்ளி வளாகங்களில் தகுந்த சமூக இடைவெளியை பராமரித்தல், முகக்கவசம் மற்றும் சானிடைசர்களைப் பயன்படுத்துவது போன்றவற்றை அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  SBI வாடிக்கையாளர்கள் செப்.30 வரை கட்டணமின்றி புதுப்பிக்கலாம்!!
Back to top button
error: