இந்தியா

நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு!

கேரளாவில் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாட்டிலேயே அதிகபட்ச கொரோனா தினசரி பாதிப்புகளை பதிவு செய்யும் மாநிலமாக கேரளா மாறியது. இதனையடுத்து, தொற்றுப் பரவலைக்‍ கட்டுப்படுத்த தீவிர நடவடிக்‍கை எடுத்து வரும் மாநில அரசு, வரும் 30ஆம் தேதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதையும் படிங்க:  பஞ்சாப் முதலமைச்சராக சரண்ஜித் சிங் இன்று பதவியேற்பு!

இந்நிலையில், பல மாதங்களாக மூடப்பட்டிருக்கும் பள்ளிகளை திறப்பது தொடர்பாக, முதல்வர் திரு. பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்‍ கூட்டத்தில், நவம்பர் மாதம் ஒன்றாம் தேதிமுதல் வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்‍கப்பட்டது.

பள்ளிகளை திறக்க கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து செயல்பட வேண்டும் என்றும், அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரத் திட்டங்களை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்புகள் செயல்படும் என்றும், எஞ்சிய வகுப்புகள் நவம்பர் மாதம் 15-ம் தேதி முதல் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வகுப்பறைகளில் 50 சதவீத மாணவர்கள் வீதம் சுழற்சி முறையில் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  ஜம்மு-காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவும் டிரோன்கள்.. சுட்டு வீழ்த்த பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவு!

உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: