தமிழ்நாடு

வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் திறப்பு – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!!

தமிழகத்தில் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் மீண்டுமாக திறக்கப்பட இருக்கும் நிலையில், ஒரு வாரத்தில் 6 நாட்களுக்கு பள்ளிகள் செயல்படும் எனவும், ஒரு வகுப்பறையில் 20 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என அரசின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா 2 ஆம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வழக்கம் போல பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டது. பின்னர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் வேகம் குறைந்திருப்பதை அடுத்து பள்ளிகளை மீண்டுமாக திறக்க அரசு முடிவு செய்தது. அதன்படி வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 9 லிருந்து 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் துவங்க உள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறப்பது தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,

 • பள்ளிகள் வார நாட்களில் ஞாயிற்று கிழமை தவிர மற்ற 6 நாட்களும் செயல்படும்.
 • ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவர்கள் மட்டுமே அமர்ந்திருக்க அனுமதிக்கப்படுவார்கள்.
 • ஒருவேளை பள்ளிகளில் கூடுதல் வகுப்புகள் இல்லையென்றால், மாற்று நாட்களில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்திக்கொள்ளலாம்.
 • பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டால், மாணவர்கள் அதிலும் கலந்து கொள்ளலாம்.
 • வீடுகளில் இருந்து கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் பெற்றோர்களின் ஒப்புதலுடன் அனுமதிக்கப்படுவார்கள்.
 • பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
 • பள்ளி வளாகங்கள், வகுப்பறைகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
 • மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர வைக்கப்பட வேண்டும்.
 • பள்ளிகளை திறப்பதற்கு முன்னதாக வகுப்பறைகளில் உள்ள மேஜைகள், இருக்கைகள், ஜன்னல்கள், கதவுகள் அனைத்தும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.
 • அனைத்து வகுப்புகளிலும் கிருமி நாசினி பாட்டில்கள் இருப்பு வைக்கப்பட வேண்டும்.
 • பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு – இன்று முதல் அமல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: