இந்தியா

கர்நாடகா மாநிலத்தில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 23ம் தேதி பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள்!!

கர்நாடகா மாநிலத்தில் ஆகஸ்ட் 23ம் தேதியின் நாளை முதல் பள்ளிகள் திறக்க இருக்கும் நிலையில், உத்தரபிரப்பிரதேச மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து நிகழ்ந்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2 ம் அலையின் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஏப்ரல் மாதத்தில் விதிக்கப்பட்டது. . தீவிர கட்டுப்பாடுகளின் விளைவால் மெல்ல மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ளது. இதனை அடுத்து அரசு ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகஸ்ட் 23 முதல் மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ளார்.

ஆகஸ்ட் 23 முதல் 2 சதவீதத்திற்கும் குறைவான கோவிட் நேர்மறை விகிதம் உள்ள மாவட்டங்களில் மட்டும் மீண்டும் பள்ளிகள் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளை தொடங்கலாம். முதல்கட்டமாக மாணவர்களுக்கு அரைநாள் மட்டுமே பள்ளி நடைபெறும். நேரடி வகுப்புகளுக்கு வருகை பதிவு கட்டாயமாக்கப்படவில்லை. மாணவர்கள், பெற்றோர்களிடம் தங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்று அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதம் பெற்று வர வேண்டும். 9 மற்றும் 10 வகுப்புக்கு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மதியம் 1:30 மணி வரை வகுப்புகள் நடக்கும், சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும்.

பின்னர், மத்திய இடைவேளைக்கு பின்னர், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாற்று முறைகளில் வகுப்புகள் நடத்தப்படும். உத்தரபிரதேச மாநிலத்தில் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின் மரணமடைந்துள்ளது காரணமாக நாளை பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்டுகிறது. 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மீண்டும் பள்ளிகள் திறக்கும் த்தி குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  பூஜை செய்த போது ஏற்பட்ட விபரீதம்! பரிதாபமாக உயிரிழந்த பூசாரி!
Back to top button
error: