தமிழ்நாடு

9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் & கல்லூரிகள் இன்று திறப்பு – மாணவர்கள் உற்சாகம்!!

கடந்த மார்ச் மாதம் உருவான கொரோனா பேரலையால் தமிழகத்தில் கிட்டத்தட்ட 4 மாத காலமாக செயல்படாமல் இருந்து வந்த பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் இன்று (செப்டம்பர் 1) முதல் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வகுப்புகளுக்கு செல்லத்துவங்கியுள்ளனர்.

நாடு முழுவதும் அதிதீவிரமாக உருவெடுத்த கொரோனா நோய் தொற்றால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு தழுவிய முழு முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதனால் அனைத்து மாநிலங்களும் செயல்பட்டு வந்த பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்று வேகமெடுக்க மாணவர்களின் எதிர்கால கல்வி கேள்விக்குறியாகும் சூழல் உருவானது. அதனால் ஆன்லைன் வழிமுறைகள் மூலம் வகுப்புகளை நடத்த அரசு முடிவு செய்தது.

அந்த வகையில் தமிழகத்திலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் வழியே வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா முதலாம் அலை தொற்று ஓய்ந்து வந்த நிலையில் 9 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் நடத்தப்பட்டது. அதே போல இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டது. ஆனால் 2 ஆம் அலை காரணமாக அந்த வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 1) முதல் 9 லிருந்து 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும், கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளது. அதே போல பள்ளிகளில் விருப்பமுள்ள மாணவர்கள் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் எனவும், வாரத்தில் 6 நாட்களுக்கு பள்ளிகள் செயல்படும் என அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது தவிர ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை வகுப்புகள் நடைபெற உள்ள நிலையில், வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பின்னாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறந்துள்ள நிலையில் மாணவர்கள் அனைவரும் உற்சாகத்துடன் பள்ளிக்கு செல்ல துவங்கியுள்ளனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: