பஞ்சாப் மாநிலத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மே 15 முதல் ஜூன் 30 வரை கோடை விடுமுறையை நீட்டிக்க பஞ்சாப் அரசு முடிவு செய்துள்ளது.
அதே நேரத்தில், மே 2 முதல் மே 14 வரை பள்ளி நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆரம்ப நிலை வரை அனைத்து பள்ளிகளும் காலை 7:00 மணி முதல் 11:00 மணி வரையும், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் காலை 7 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மட்டுமே திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
பஞ்சாபில் முன்னதாக ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை கோடை விடுமுறை அளிக்க இருந்த நிலையில், தற்போது கடுமையான வெப்பம் காரணமாக, குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு பஞ்சாப் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh