இந்தியா

புதுவையில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு – மதியம் 1 மணிவரை மட்டுமே வகுப்புகள்!!

புதுச்சேரியில் கொரோனா கட்டுக்குள் வந்ததையடுத்து வெகு நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளி கல்லூரிகள், திறக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி வகுப்புகள் காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகளை அரசு அறிவித்தது. இந்த நிலையில் மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து அதிகாரிகள் கலந்தாலோசனையில் ஈடுபட்டனர். அதன் பிறகு செப்டம்பர் 1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தொற்று பரவல் காலத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி புதுச்சேரியில் முதல் கட்டமாக செப்டம்பர் 1ம் தேதியான இன்று 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 9 ,11 ஆகிய வகுப்புகளுக்கு வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும். வகுப்புகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அரைநாள் மட்டுமே செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறப்பிற்கு முன்னரே தேவையான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றது. மேலும் மாணவர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும் வகையில் மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது.

அதே போல் நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று கல்லூரிகளும் திறப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிகளில் மாணவர்கள், பேராசிரியர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் இருந்தால் வகுப்பறைக்குள் ஆசிரியர்கள், மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பு பணியாக ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே கல்லூரிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  2 மணி நேரத்தில் காலியான டோக்கன்கள்..!
Back to top button
error: