தமிழ்நாடு

கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!!!

தமிழகத்தில் மத்திய பல்கலைக்கழகங்களில்‌ பயிலும்‌ மிக பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்‌தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபின மாணவர்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் மாணவர்கள் உதவித்தொகை பெற்று இடைநிற்றல் இன்றி தொடர்கின்றனர். மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ இன மாணவ, மாணவிகள்‌ 2021- 2022ம்‌ கல்வி ஆண்டிற்கான உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மற்றும்‌ பிற மாநிலங்களில்‌ உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயில்வோருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம்‌, ஐஐஐடி, என்ஐடி மற்றும்‌ பிற மத்திய கல்வி நிறுவனங்களில் பயிலும் பட்டியலின மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்களின் குடும்ப வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இதற்கு தேர்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு அதிகபட்சம்‌ ரூ.2 லட்சம்‌ வரை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால்‌ ஆணையிடப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகை பெற தகுதியான மாணவர்கள் மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலர்களை சந்தித்து விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌. கல்வி நிறுவனங்கள்‌ சான்றொப்பத்துடன்‌ தகுதியான விண்ணப்பத்தினை 31.11.2021க்குள் இயக்குநர்‌, பிற்படுத்தப்பட்‌டோர்‌ நல இயக்ககம்‌, எழிலகம்‌ இணைப்பு கட்டடம்‌, 2வது தளம்‌, சேப்பாக்கம்‌, சென்னை – 5 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  இதனால்தான் சோதனை நடைபெறுகிறது; ஜெயக்குமார் கருத்து..!
Back to top button
error: