தமிழ்நாடு

தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – மயிலாடுத்துறை ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில் தொழிற்கல்வி பயிலும் குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு கல்வித்தொகையாக ரூபாய் 50,000 வரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் சேர மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மயிலாடுத்துறை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், கால்நடை மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவம், வேளாண், மற்றும் சட்ட கல்லூரிகளில் ஒற்றை சாரள முறையில் சேர்க்கை பெரும் மாணவர்கள் அவர்களின் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருந்தால் அவர்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி தொகையாக ரூபாய் 50,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு அரசின் முகாமையால் நடத்தப்படும் ஒற்றை சரளா முறை வழியாக மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாட்டை சார்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்கும் இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகை பெறும் விவசாயிகள் மகன், மகள்கள், கல்வி உதவித்தொகை பெறும் முன்னாள் ராணுவ வீரர்களின் மகன், மகள்கள் ஆகியோர் விண்ணப்பிக்க இயலாது.

மேற்கண்ட தகுதி உடையவர்கள் 12 ம் வகுப்பு மதிப்பெண்கள் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் கல்லூரியில் ஒற்றை சரளா முறையில் சேர்க்கை பெற்றதற்கான ஆணை ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  கொடைக்கானல் ஏரி படகு சவாரிக்கான கட்டணம் உயர்வு!!
Back to top button
error: