பொழுதுபோக்கு

மணமும், சுவையும் நிறைந்த எள்ளுப் பொடி.. நாமே வீட்டில் சுகாதாரமாக செய்யலாம்..!!

மணமும், சுவையும் நிறைந்த எள்ளுப் பொடி இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும். அதுமட்டுமின்றி எள் சாதம் கூட செய்யலாம். ருசியோ அல்லும்.. சரி இப்போது இந்த எள்ளுப் பொடியை வீட்டில் சுகாதாரமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

எள் – 1 கரண்டி (சற்றே பெரிய ஸ்பூன்)

உளுத்தம் பருப்பு – 1 கரண்டி (சற்றே பெரிய ஸ்பூன்)

காய்ந்த மிளகாய் – 4 (பெரிய சைஸ்)

உப்பு – தேவையான அளவு

பெருங்காயம் – 1 சிட்டிகை

செய்முறை

முதலில் எண்ணெய்யை ஊற்றாமல் வாணலியில் எள்ளை மட்டும் நன்கு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பிறகு அதே வாணலியை பயன்படுத்தி எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் இவற்றை எல்லாம் தீய விடாமல் நன்கு வறுத்துக் கொள்ளவும்.

பின்னர் இந்த அனைத்து சாமான்களையும் மிக்சியில் வைத்து உடன் உப்பு சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ளவும்.

பின்னர் இதனுடன் சேர்த்து முன்பு வறுத்த எள்ளையும் வைத்து நன்றாகக் பொடியாக்கி அரைத்து வைத்துக் கொள்ளவும்.

ellu

இப்போது இந்தப் பொடியை தான் எள் சாதம் செய்ய பயன்படுத்த இருக்கிறோம்.

மருத்துவ நன்மைகள்

கறுப்பு எள் அதிக மருத்துவப் பண்புகள் கொண்டது. இதில் அதிகளவு சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ப்ரெட் போண்டா செய்வது எப்படி?
Back to top button
error: