இந்தியா

SBI வாடிக்கையாளர்கள் செப்.30 வரை கட்டணமின்றி புதுப்பிக்கலாம்!!

எஸ்பிஐ லைஃப் பாலிசியை செப்டம்பர் 30ம் தேதி வரை புதுப்பித்து கொள்ளலாம் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது. கொடுக்கப்பட்ட கால கெடுவுக்குள் இணையத்தளம் வாயிலாக புதுப்பித்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ பொது துறை வங்கியானது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய சிறப்பான சலுகைகளை வழங்குகிறது. கடந்த மாதம் புதிதாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு, எஸ்பிஐ எந்தவித செயலாக்க கட்டணமும் இன்றி கடன் வழங்கும் புதிய திட்டத்தை வழங்கியது. மேலும் வீட்டிலிருந்தே ஆன்லைன் புதிய ஏடிஎம் கார்டு பெரும் வசதியை அளித்தது. இதன் மூலம் எஸ்பிஐ யோனோ ஆப் மூலமாகவும் நீங்கள் ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த செயலி மூலம் 5 நிமிடத்தில் எஸ்பிஐ வங்கியில் புதிய கணக்கு தொடரலாம்.

அதே போல வீட்டு கடன், கல்விக் கடன், வாகனக்கடன், கிரெடிட் கார்டு, காப்பீடு திட்டங்கள், ரயில் டிக்கெட் புக் செய்தல் போன்றவற்றையும் இச் செயலி மூலம் எளிதாக செய்யலாம். அதனை தொடர்ந்து தற்போது எஸ்பிஐ லைஃப் பாலிசியை புதுப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பலர் பாலிசிகளை புதுப்பிக்க தவற விட்டனர். அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் படி லைப் பாலிசியை 2 முதல் 3 வருட காலமாக புதுபிகாத்தவர்கள் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ லைஃப் பாலிசியை மீண்டும் புதுப்பிக்க https://mypolicy.sbilife.co.in/Campaign/RevivalQuotation.aspx என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் கேட்கப்படும் பாலிசி சம்பந்தமான விவரங்களை சரியாக பூர்த்தி செய்து புதுப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க:  மத்திய அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.3000 பென்ஷன் திட்டம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: