தமிழ்நாடுமாவட்டம்

சாத்தூர் வெடி விபத்து.. பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு..

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.

அச்சங்குளத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில், தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, பட்டாசுகள் திடீரென வெடித்தன. அடுத்தடுத்த அறைகளில் இருந்த பட்டாசுகள் வெடித்ததில், 9 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 13 அறைகள் இடிந்து தரை மட்டமாகின. படுகாயமடைந்த 30-ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோதி, காங்கிரஸ் எம்.பி. திரு.ராகுல்காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்கப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது.

Back to top button
error: Content is protected !!