இந்தியா

சசிகலா உடல் நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

சசிகலாவிற்கு 6 நாட்களுக்கு பிறகு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவு மாறுப்பட்டு வருவதாக விக்டோரியா மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவுக்கு கடந்த 20-ம் தேதி அன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் பெங்களூரு, சிவாஜி நகரில் உள்ள பெளரிங் அரசு மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் அங்கிருந்து விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சசிகலா உடல்நிலை குறித்து விக்டோரியா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிகுறி இல்லாத கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் சசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது எனவும் தொடர்ந்து 4வது நாளாக ஆக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி இயற்கையாக சசிகலா சுவாசித்து வருகிறார் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் சசிகலா உடலில்
ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருக்கிறது என்றும் அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Back to top button
error: Content is protected !!