தமிழ்நாடு

சசிகலா ஆதரவு போஸ்டர்.. அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்..

சசிகலா இன்று சிறையிலிருந்து விடுதலையாவதை தொடர்ந்து அவரை வரவேற்று போஸ்டர் வைத்த அதிமுக இணை செயலாளர் கட்சியின் அடிப்படை பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

நிர்வாகத்திலிருந்து நீக்கம்

சசிகலா இன்று விடுதலையானதை தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது சசிகலாவின் வருகைக்கு அவரை வாழ்த்தி வரவேற்று போஸ்டர் வைத்த திருநெல்வேலி எம்ஜிஆர் மன்றத்தை சேர்ந்த மாவட்ட இணை செயலாளர் சுப்ரமணிய ராஜா என்பவரை அவரது கட்சி பொறுப்பிலிருந்தும் அடிப்படை நிர்வாகத்திலிருந்தும் அவரை அதிரடியாக நீக்கியுள்ளது அதிமுக கட்சி நிர்வாக அலுவலகம்.

‘அதிமுகவை வழிநடத்தி செல்ல வருகை தரும் கட்சி பொதுச்செயலாளர் வாழ்க வருக வெல்க’ என்று அந்த போஸ்டர் அடிக்கப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் கட்சிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிமுக கழகத்தின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

EsuZALIUcAMkE1K

கட்சியின் சார்பாக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கையில் ‘கழகத்தின் குறிக்கோளுக்கும் கொள்கைக்கும் முரணாக செயல்பட்டதாலும், கழகத்தின் கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு மாசு ஏற்படுத்தியதாலும், கலங்கம் ஏற்படுத்தும் வகையில் அவப்பெயரை உண்டாக்கியதாலும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணிய ராஜா என்பவரை கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்பிலிருந்தும் அவரை நீக்குவதாக அறிக்கை வெளியானது. மேலும் மற்ற கழக உறுப்பினர்களும் சொந்தங்களும் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

Back to top button
error: Content is protected !!