கொடநாடு கொலை, கொள்ளை குறித்து சசிகலாவிடம் காவல்துறையினர் இன்றும் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் தனிப்படை காவல்துறையினர் நேற்று 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து சென்னை தி.நகரில் உள்ள சசிகலா இல்லத்தில் இன்று காலை 10 மணிக்கு விசரணை தொடர உள்ளனர். தனிப்படை ஐ.ஜி. சுதாகர், நீலகிரி எஸ்.பி. ஆஷிஸ் ராவத் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சசிகலா கோடநாடு வழக்கு தொடர்பாக காலையில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளதாக தெரிவித்தார். விசாரணை நிறைவடைந்த பிறகு இது தொடர்பாக விரிவாக கூறுவதாகவும் தெரிவித்தார்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh