ஆன்மீகம்

சங்கடங்களை தீர்க்கும் சஷ்டி விரதம்!

முருக பெருமானை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் வந்த வினைகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம். முருகனை வழிபடுவதற்கு உகந்த தினமாக மாதந்தோறும் வருகின்ற கிருத்திகை மற்றும் 15 நாட்களுக்கு ஒரு முறை வருகின்ற சஷ்டி போன்ற தினங்கள் மிகச் சிறந்ததாகும். அதையடுத்து, ஆவணி தேய்பிறை சஷ்டி தினத்தன்று முருகப்பெருமானை எவ்வாறு விரதமிருந்து வழிபட்டால் மிகச் சிறப்பான பலன்களைப் பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

விரதம்

ஆவணி மாத தேய்பிறை சஷ்டி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விரதத்தை தொடங்க வேண்டும்.

அன்றைய தினம் மூன்று வேளையும் உணவு ஏதும் சாப்பிடாமல் பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது சிறப்பாகும்.

விரத நாளில் வீட்டில் தூய்மையாக இருக்க வேண்டும். அனைவரிடமும் அன்பாக பேச வேண்டும்.

தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள கூடாது.

உண்ணாவிரதம் இருப்பதால் உங்கள் வாழ்வில் பல நன்மைகள் ஏற்படும்.

எந்த வயது பிரிவினர்களாக இருந்தாலும், சஷ்டி தினத்தன்று முடியும் என்றால் மௌனவிரதம் இருப்பது மிக சிறந்தது.

வழிபாடு

பூஜையறையில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை சாற்றி, தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும்.

முருகனுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. எனவே, அரளி முதலான பூக்களால் அலங்கரிக்கலாம்.

சஷ்டி தினத்தன்று காலையும், மாலையும் விளக்கேற்றுங்கள்.

முருகப்பெருமானுக்கு, எலுமிச்சை சாதம், சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள்.

முருகப் பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற பாடல்களை பாடி முருகப் பெருமானை வணங்க வேண்டும்.

மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வணங்க வேண்டும்.

இன்று சனிக்கிழமையாக இருப்பதால், நவகிரக சந்நிதியில் இருக்கும் சனி பகவானுக்கு தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும்.

பின்பு வீடு திரும்பியதும் பூஜை அறைக்கு சென்று, முருகப்பெருமானை வணங்கி நைவேத்திய பிரசாதங்களை சாப்பிட்டு சஷ்டி விரதத்தை முடிக்கலாம்.

பலன்கள்

ஆவணி தேய்பிறை சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு சங்கடங்கள், துன்பங்கள் அனைத்தும் தீரும்.

திருமணம் ஆகாமல் இருந்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.

திருப்புகழைப் பாராயணம் செய்வோருக்கு குழந்தைப் பேறு கிடைக்கும்.

வீட்டில் உள்ள சிறுவர்கள் முருகப்பெருமானை வணங்கிட கல்வியிலும், கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.

தொடங்கும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றிகள் உண்டாகும். பொருளாதார கஷ்டம் நீங்கும்.

தொழில், வியாபாரங்களில் லாபங்கள் பெருகும்.

நேரடியான மற்றும் மறைமுகமான எதிரிகள் தொல்லை அனைத்தும் முருகனருளால் விலகும்.

உடல் ஆரோக்கியம் மேம்படும்.

நாளை ஆவணி மாத கிருத்திகை

ஆவணி மாத கிருத்திகை விரதம் இருப்பவர்கள் பால், பழம் மட்டும் எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் உணவு சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும்.

மாலையில் அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று முருகனை வழிபட்டு விரதத்தை முடிக்கலாம்.

கந்த சஷ்டி, கந்த புராணம், சண்முக கவசம், கந்தர் கலிவெண்பா போன்ற முருகன் பாடல்களை படிப்பது மிகுந்த நன்மையை கொடுக்கும்.

கிருத்திகை விரதத்தை தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் பின்பற்றுவதால் வாழ்க்கையில் பெரும் வெற்றிகளைப் பெறலாம்.

ஆவணி மாத கிருத்திகை விரதம் இருப்பவர்களுக்கு, நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும், பண்பும் நிறைந்த வாழ்க்கைத் துணை கிடைக்கும்.

எனவே, நாளை மறக்காமல் ஆவணி மாத கிருத்திகை விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு பயன்பெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: