தமிழ்நாடுசினிமா

செக் மோசடி.. சரத்குமார்-ராதிகாவுக்கு ஓராண்டு சிறை..!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் சரத்குமார், ராதிகா தம்பதி. நடிகை ராதிகா ராடன் மீடியா என்ற நிறுவனத்தின் நிறுவனத்தின் மூலம் பல தமிழ் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்து வருகிறார்.

சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பித்து நடத்தி வரும் நிலையில் நேற்று நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து களம் கண்டார். இந்த கூட்டணியில் சரத்குமார் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் ராதிகாவும், சரத்குமாரும் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்து கடைசி நேரத்தில் பின்வாங்கினர்.

இந்நிலையில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் இருவருக்கும் செக் மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை எம்பி ,எம்எல்ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு ‘இது என்ன மாயம்’ பட தயாரிப்புக்காக ரேடியன்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ 1.5 கோடியை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் வாங்கியது. கடனை திருப்பி அளிப்பதில் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் செக் மோசடி செய்தது. அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக நடிகர் சரத்குமாரும், ராதிகாவும் உள்ளனர். சரத்குமார், ராதிகா வங்கி கணக்கில் பணம் இல்லாததால் 7 செக்குகளும் திரும்பி வந்தது.

இதையடுத்து சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார், பங்குதாரர் ஸ்டீபன் ஆகியோருக்கு எதிராக சைதாப்பேட்டை கோர்ட்டில் ரேடியன்ஸ் நிறுவனம் சார்பில் 7 கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது.

இதையடுத்து இந்த வழக்கு எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அந்த வகையில் தற்போது விசாரணை முடிந்து சரத்குமாருக்கு செக் மோசடி தொடர்பான 7 வழக்குகளில் தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ராதிகாவுக்கு 2 வழக்குகளில் தலா ஒரு வருடமும், மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் பங்குதாரர்களின் லிஸ்டன் ஸ்டீபனுக்கு 2 வழக்குகளில் தலா 7 ஆண்டு சிறை தண்டனை அளித்து சென்னை சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: