இந்தியா

பஞ்சாப் முதல்வராக பதவியேற்றார் சரண்ஜித் சிங் சன்னி..!

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றுக்கொண்டார்.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியிலிருந்த முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும், கட்சியின் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

அடுத்த மாதம் பஞ்சாப்பில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் முதல்வர் அமீர்ந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனை தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தில் ஒருமனதாக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டு பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக காங்கிரஸ் கட்சியின் சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார்.

சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் சரண்ஜித்துக்கு ஆளுநர் பன்வாரிலால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அடுத்த ஆண்டு பஞ்சாப்பில் பேரவை தேர்தல் நடக்கும் நிலையில் புதிய முதல்வராக சரண்ஜித் பதவியேற்றார்.

இதையும் படிங்க:  ஜம்மு-காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவும் டிரோன்கள்.. சுட்டு வீழ்த்த பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவு!

உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: