மாவட்டம்

சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.90 லட்சம்..

திருச்சி மாவட்டம் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிகைகள், மாதத்திற்கு இரண்டு முறை எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதம் நேற்று 2-வது முறையாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோயில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

https://i2.wp.com/static.langimg.com/thumb/msid-80463643,imgsize-45606,width-540,height-405,resizemode-75/samayam-tamil.jpg?w=708&ssl=1

இதில் கோயில் ஊழியர்கள், பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, உண்டியலில் இருந்த காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, உண்டியல் காணிக்கையாக 90 லட்சத்து 7 ஆயிரத்து 494 ரூபாய் ரொக்கப் பணம் கிடைக்கப் பெற்று உள்ளது. மேலும், 2 கிலோ 142 கிராம் தங்கம் மற்றும் 4 கிலோ 174 கிராம் வெள்ளியும், 140 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் வசூல் ஆனது.

Back to top button
error: Content is protected !!